சுகன்யா தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. இவர் புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் கோட்டைவாசல், சின்ன கவுண்டர், மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
மேலும், இவர் பொதிகை டிவியில் பெப்ஸி என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு இவர் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், இவர் தனது மகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.