Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS மொகத்தை பார்த்தீர்களா.. எவ்வளவு கொடூரமா இருக்கு.. கலாய்த்த வைத்தியலிங்கம் ..!!

ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஓபிஎஸ் டிடிவி தினகரன் அவர்களை கேட்டார்கள், சின்னம்மா அவர்களை கேட்டார்கள், எல்லோர்களுக்கும் இந்த அழைப்பு என்று சொல்லி இருக்கின்றார்கள். மேல் முறையீட்டுக்கு சென்று இருக்கிறார்கள், நாங்கள் அதை சந்திப்போம். கூட்டுத் தலைமை வேண்டும், அதாவது இப்போது புரட்சித்தலைவரோ, புரட்சித்தலைவியோ கிடையாது.

இந்த இயக்கம் இப்போது கூட்டுத் தலைமை இருந்தால் தான் வலுவான இயக்கமாக இருக்க முடியும். ஒரு சிலர் அதாவது திரு எடப்பாடி பழனிச்சாமினுடைய முகத்தை பார்த்திருப்பீர்கள், எவ்வளவு கொடூரமாக இருந்தது.அதே முகத்தை அண்ணன் ஓபிஎஸ் முகத்தை பார்த்திருப்பீர்கள் எவ்வளவு புன்சிரிப்போடு இருந்தது, இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் உள்ளத்தில் இருப்பது தான் முகத்தில் தெரியும்.

ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஓபிஎஸ் அவர்கள் எந்தெந்த ஆவணங்கள் திருடு போயிருக்கிறது என்று அவர்கள் லிஸ்ட் கொடுக்கட்டும், நாங்கள் அங்கு சென்றோம். தலைமை கழகத்திற்கு செல்ல வேண்டியது எங்களுடைய கடமை. அப்போது அவர்தான் ஒருங்கிணைப்பாளர், அவர்தான் பொருளாளர் நாங்கள் சென்றோம்.

பாஜக, மற்ற கட்சிகளை இதில் நீங்கள் இணைத்து பேச வேண்டாம். இது எங்களுடைய உள்கட்சி பிரச்சனை. மற்ற கட்சிகள் இதில் தலையிடுவதை நாங்கள் விரும்ப மாட்டோம். ஓபிஎஸ் இணையும் போது, என்னென்ன நடந்தது என்பது எனக்கு தெரியும். ஆனால் இணையும்போது பேசியவற்றை அனைத்தையும் மறந்து விட்டார் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திட்ட விட்டமாக சேர மாட்டோம் என்று சொல்லி இருக்கின்றார், அவர் வேண்டுமென்றால் சேராமல் இருக்கலாம். கோடிக்கணக்கான தொண்டர்கள் சேருவதற்கு தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |