பிரபல நடிகை ரீமா சென் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் ரீமாசென். இதைத் தொடர்ந்து பகவதி, தூள், எனக்கு 20 உனக்கு 18, கிரி என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வந்த இவர் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தார். அதன் பிறகு கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகை ரீமாசென் ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
இவர்களுக்கு தற்போது ருத்ரவீர் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ரீமா சென் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/CKl12-_JSuc/?utm_source=ig_embed&ig_rid=da009d92-7ad8-496f-bf6f-411c2a123cb3