பிறந்த குழந்தைகள் இருக்கும் வீட்டில் நாம் மருந்து பொருள்கள் என்று ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, திப்பிலி, பெருங்காயம் போன்ற பொருள்களை வைத்திருப்போம். அது எதற்கு என்றால் குழந்தைகளுக்கு ஏதேனும் வலி ஏற்பட்டால் அதற்கு இது மருந்தாக இருக்கும் என்பதற்குத்தான்.
அதில் மாசிக்காயை பற்றி தான் நாம் இதில் பார்க்க போகிறோம்.
பெண்களுக்கு இயற்கை தந்த வரம் தாய்மை. மாதவிடாய் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு இந்த மாசிக்காய் சிறந்த பலனை தரும் .
மாசிக்காய் பொடி புண்கள், கட்டிகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
சில உணவுகளை உண்ணும் போது நமக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். அப்படிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க இந்த மாசிக்காயை பொடி உதவுகிறது.
நாம் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக நமக்கு அடி ஏற்படும் அப்படிப்பட்ட சமயங்களில் ரத்தம் அதிக அளவில் வெளியேறுவதை தடுக்க, இந்த மாசிக்காயை நெருப்பில் சுட்டு காயத்தில் வைத்தால் ரத்தம் வெளியேறுவது நிற்கும்.
சில ரசாயனங்கள் விஷத்தன்மை கொண்டவை, அதை உண்பவர்கள் உடலில் இருந்த நச்சை நீக்குவதற்கு இந்த மாசிக்காயை ஐந்து கிராம் அளவில் எடுத்து மூன்று வேளை கொடுத்தால் அது நஞ்சை முறிக்கும்.