Categories
லைப் ஸ்டைல்

இறைச்சி சாப்பிடுறதை நிறுத்திட்டீங்களா…? என்ன நடக்கும் தெரியுமா…? தெரிஞ்சிக்கோங்க…!!

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும் போது நம்முடைய உடலில் என்னென்ன நடக்கும் என்று இப்போது பார்க்கலாம்.

அசைவ உணவு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அசைவ பிரியர்களுக்கு தினமும் ஏதாவது ஒரு அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் அவர்களுக்கு உணவு உள்ளே இறங்காது. ஆனால் மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் அசைவ உணவை கொஞ்சம் ஒதுக்கி வைப்பது நல்லது. ஒருவர் திடீரென இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் என்ன மாற்றங்கள் உண்டாகும் என்பதை இப்போது இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1.உடல் சூடு மற்றும் உடல் சூடு காரணமாக உண்டாகும் சூட்டுக் கொப்புளங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.

2.இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது முதலில் உடல் எடை 3 அல்லது 4 கிலோ வரை குறைய வாய்ப்புள்ளது.

3.பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்பும் ஏற்படும் பெண் குழந்தைகள் அதிகளவில் எடுத்துக் கொண்டால் சிறுவயதிலேயே பருவம் அடைந்து விடுவார் எனவே இறைச்சி சாப்பிடாதது நல்லது.

4.இறைச்சியை நிறுத்துவதால் 3கிலோ வரை உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.

5. இறைச்சியை சாப்பிடாததால் 24% இதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

6.ஆட்டு இறைச்சியில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் அதை தவிர்க்கும் போது உடலில் கொழுப்பின் அளவு குறையும்.

7.செரிமானக் கோளாறுகள் குறையும் மற்றும் செரிமான மண்டலம் இலகுவாகும்.

8.உடல் தசைகள் வலுவடைய புரதச்சத்து மிகவும் அவசியம் எனவே இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது புரதச்சத்து குறைய வாய்ப்புள்ளது. எனவே சத்து நிறைந்த சைவ உணவு சாப்பிடுவதன் மூலம் இதை ஈடுகட்டலாம்.

Categories

Tech |