Categories
இந்திய சினிமா சினிமா

லைகர்‌ படத்தில் ஹவாலா பணம் முதலீடு….. நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் 12 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை….!!!!!

தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தின் மூலம் உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த விஜய் தேவரகொண்டா பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரிலீசான லைகர் திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்க, நடிகை‌ சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்த படத்தை தயாரிப்பதற்கு ஹவாலா பணத்தை முதலீடு செய்ததாக இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை‌ சார்மி மீது காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் ஆகியோரிடம் அமலாக்க துறையினர் 15 மணி நேரம் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிடமும் தற்போது அமலாக்க துறையினர் ஹவாலா பண முதலீடு குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இவரிடம் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து 12 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு வெளியே வந்த விஜய் தேவரகொண்டா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, பிரபலமாக இருப்பதால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நான் தற்போது என்னுடைய கடமையை செய்துள்ளேன். இங்கு வந்து அவர்களுடைய கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளித்தேன். மேலும் மீண்டும் என்னை விசாரணைக்கு அவர்கள் அழைக்கவில்லை என்று கூறினார்.

Categories

Tech |