Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணம் தான கேட்டாரு… தந்தை என்றும் பார்க்காத கொடூர மகன்… வலைவீசி தேடி வரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணம் கேட்டதற்காக சொந்த தந்தை என்று கூட பாராமல் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடை லெப்பை தெருவில் தியாகராஜன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக். இந்நிலையில் கார்த்திக் என்பவர் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அவர் விடுமுறைக்கு ராமநாதபுரத்திற்கு வந்துள்ளார். அப்போது தியாகராஜன் கார்த்திக்கிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த கார்த்திக் சொந்த தந்தை என்றும் பாராமல் கத்தியால் தியாகராஜனின் தலை மற்றும் உடம்பில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

Categories

Tech |