திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாம் ஆட்சியில் இல்லை. லஞ்ச ஒழிப்புத் துறையை சார்ந்தவர்கள் நம்முடைய இனமான பேராசிரியர் உடைய இல்லத்திற்கு சென்று அங்கு சோதனை நடத்துகிறார்கள். அந்த சோதனை நடந்து முடித்த பிறகு, அங்கு இருக்கிறவர்களை எல்லாம் பார்த்து நம்முடைய இனமான பேராசிரியர் ஒன்னே ஒன்னு சொன்னாராம்…
என் வீட்டு அலமாரியை நான் சுத்தம் செய்து ரொம்ப நாளாச்சு. அதைசெய்து கொடுத்ததற்கு முதலில் என்னுடைய நன்றி என்று அந்த புன்னகையோடு அவர் சொன்னது தான் நம்முடைய இனமான பேராசிரியர் அவர்கள். இனமான பேராசிரியர் பெருமை என்னவென்றால், அவர் பேராசிரியராக பணிபுரிந்த போது பொண்ணு பார்க்கப் போகிறார் அவருக்கு…
பொண்ணு பாக்க போகும் போது நாம் என்ன கேட்போம் ? பொண்ணு அழகா இருக்கிறதா? பொண்ணுக்கு நம்மளை பிடிக்குமா? நமக்கு பிடித்த மாதிரி பொண்ணு இருக்குமா? என்று கேள்விகள் கேட்போம். அதை வைத்து தான் நாம் கேள்விகள் கேட்போம். ஆனால் பேராசிரியர் அவர்கள் வேறு எதையுமே கேட்கவில்லை… பொன் பேரை மட்டும் தமிழில் மாற்றிக் கொள்ள முடியுமா ? அவ்வளவு தான் கேட்டார்.
ஜெயலட்சுமி என்கின்ற பெயரை வெற்றி செல்வி ஆனது என்று சொன்னால், அது நம்முடைய இனமான பேராசிரியர்… நம் மொழி மீதும், இனத்தின் மீதும் வைத்திருக்கின்ற அந்த பற்றுக்கு இது எல்லாம் ஒரு எடுத்துகாட்டு. அண்ணா அவர்கள் மறைந்த பிறகு இந்த திராவிட இயக்கத்தை வழிநடத்தக்கூடிய தகுதி படைத்தவர் யார் ? என்று சொன்னால், அது நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் என்று அன்று சொன்னவர் நமது இனமான பேராசிரியர் அவர்கள் என தெரிவித்தார்.