நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, ஆஸ்திரேலியாவுல ஆடு, மாடு மேய்க்கிறவன்…. அமெரிக்காவில் ஆடு, மாடு மேய்க்கிறவன்… நானும் ஒன்னா ? ஏன் இப்படி அறிவு கெட்டு அலையனும் நம்ம.. நான் வேற, அவன் ஆஸ்திரேலியன், அவன் அமெரிக்கன், நான் தமிழன், அதை புரிஞ்சுக்கணும்… நான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றேன்.
ஒரு வழிபாட்டுக்காக ஒரு மார்க்கத்தை ஏற்று, நபி வழியை ஏற்று நான் நடக்கிறேன் இஸ்லாமியன்… அரேபியாவில் இருக்கிறவன் எல்லாரும் இஸ்லாமியர். அவனும், நானும் ஒன்னா ? அவன் அரேபியன்… நான் தமிழன்.. திமிர் இருக்கணும்.. நான் இரண்டாவது பெரிய தாய்குடி, கோன். ஆயர்… தமிழ் இளம் தலைமுறையாது எந்திருச்சி வா ?
யாதவ், கீதவ் என சொல்லிட்டு வந்தா ? போடா..! அங்குட்டு போடா.. டேய் கோன் இருந்தா உன் இடம் உனக்கு டா… யாதவனு இருந்தா ? தெலுங்குல யாதவ் இருக்கு… நீ லல்லு பிரசாத் யாதவுக்கு இடம் கொடுக்கணும். முலாயம் சிங்குக்கு சீட்டு கொடுப்ப.
உனக்கு தி.நகர்னு ஒன்னு இருக்கு. வர்த்தக நகரம்.. அங்க சத்யநாராயண யாதவ் அவர் தான் மாவட்ட செயலாளர். அவர் தான் எம்எல்ஏ. அவர் யாரு ? அவரு தெலுங்கர். கோன் இருந்தா, அந்த இடம் எனக்கு வந்து இருக்கும். யாதவர் என்று அவனுக்கு போய்ட்டு… நானே நெளிஞ்ச தட்டில் நாலு பருக்கையை போட்டு இருக்கேன், அதுல அவனுக்கு இரண்டு எடுத்து கொடுத்துட்டு, என்னடா… இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாந்துட்டு திரியுறது என பேசினார்.