கமலுக்கு தலைவருக்கான அந்தஸ்து இன்னும் வரவில்லை என்று கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021 வருடம் நடக்க இருக்க நிலையில் எதிர் கட்சியினரும், ஆளும் கட்சியினரும் தங்களை ஒருவருக்கொருவர் மாறி மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கட்சியினருக்கும், கமலுக்கும் இடையே வார்த்தை போர் மூண்டு வருகிறது. இபிஎஸ் அவர்கள் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்தால் குடும்பம் உருப்படாமல் போய்விடும் என்று விமர்சனம் செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, முதல்வர் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கமல் கூறியுள்ளார்.
இவ்வாறு ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் தேர்தலோடு கமல் தடம் தெரியாமல் போய் விடுவார். தலைவர் அந்தஸ்து கமலுக்கு இன்னும் வரவில்லை என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கமல் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெளிவாக சொல்லட்டும். அவர் பேச்சை பார்த்து மக்கள் குழம்பி உள்ளனர் எனக் கூறியுள்ளார். கமல் இந்த நாட்டில் தான் இருக்கிறாரா? என தெரியவில்லை. தமிழகம் அனைத்து துறைகளிலும் சீராக தான் உள்ளது என்றார்.