Categories
அரசியல் மாநில செய்திகள்

கையில் திரிசூலம், வேலு, ஈட்டி இருக்கு..! RSSஐ தூள் தூளாக்கிடுவோம்…! செம போடு போட்ட வேல்முருகன் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  11ஆம் தேதி மாலை 4 மணிக்கு அண்ணன் திருமா உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அறைகூவல் விடுத்து இருக்கிற அந்த மனிதசங்கிலி என்பது மனிதநேயத்தை  காப்பதற்காக விடுக்கப்பட்ட மாபெரும் மனித சங்கிலி.

நான் கேட்கிறேன்…. 45க்கும் மேற்பட்ட இயக்கங்கள், அரசியல் கட்சிகள், மாபெரும் அறப்போர் இயக்கங்கள்,  எதிரி எத்தனை பெரிய ஆயுதம் கொண்டு வந்தாலும், தன் நெஞ்சுரத்தால் தூள்தூளாக ஆக்கக்கூடிய ஆற்றல் படைத்த படைகள் கொண்ட இந்த மாபெரும் இயக்கம்,  அறவழிப் போராட்டத்தில் எங்கள் உணர்வுகளை வெளிக்காட்ட கூடுகிறோம். ஆனால் நான் கேட்கிறேன்…..

55 இடங்களுக்கும் மேலாக ஆர்எஸ்எஸ் சங்பரிவாரக் கும்பல்களின் அணிவகுப்பு எதற்காக ? கையில் திரிசூலத்துடனும்,  கையில் வேலுடனும், கையில் ஈட்டியுடனும் எதற்காக அந்த அணி வகுப்பு ? என்ன தேவை எழுந்திருக்கிறது தமிழ்நாட்டில் அந்த அணி வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக…

இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழுகின்ற பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பகுதிகளிலும், திட்டமிட்டு ஊர்வலம் என்கின்ற பெயரிலே, சூறையாடுவதற்கும்,  எனது இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் ரத்த வேர்வை சிந்த சிந்த உழைத்து பிரியாணி குண்டாவை அவன் உருவாக்கினால்,  அதை தூக்கி கொண்டு போவதற்கும்  பேரணி நடத்துகின்ற கும்பல்களே….  இதில் என்னத்தை சாதிக்க போறீங்க நீங்க ? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |