Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு பகுத்தறிவு பகலவன்…. ஓ.பி.எஸ் ட்விட் போட்டு கண்டனம் …!!

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,  சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்மநபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடும்நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |