நடிகை ஆத்மிகா பிரபல நடிகர் விஜய் ஆண்டனியை புகழ்ந்து தள்ளியுள்ளார்
தமிழ் திரையுலகில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆத்மிகா முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒரே படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் மத்தியில் ஆத்மிகா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “கோடியில் ஒருவன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து ஆத்மிகா கூறியுள்ளார். அதில்,”கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நான் கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறேன். இப்படத்தில் விஜய் ஆண்டனி மிகவும் திறமையாக நடித்துள்ளார்.
அவர் ரியல் வாழ்க்கையிலேயே ஹீரோ. கொரோனா ஊரடங்கிற்கு பின் படப்பிடிப்பு தொடங்க அனுமதி வழங்கப்பட்டவுடன் முதல் ஆளாக படப்பிடிப்புக்கு செல்லலாம் என்று அவர் கூறினார். படக்குழுவினரின் நிலையை அறிந்து அவர் எடுத்த முடிவு மிகவும் பாராட்டுக்குரியது” என்று கூறியுள்ளார்.