முட்டாளைப் பற்றி பேச நேரமில்லை என்றும் அறிவார்ந்த சண்டைகள் தான் தேவை என்று திருமுருகன் காந்தி ரஜினியை விமர்சித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கோர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் அவருக்கு எதிராக திமுக , அதிமுக என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் திருமுருகன் காந்தியும் ரஜினியை வசை பாடியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட மோசோதாவுக்கு எதிராக மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் , பாஜக அரசின் கடந்த 5 ஆண்டுகால வரலாற்றில் இந்த அரசு மண்டியிட்ட ஒரே தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம். அது போல தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மக்களையும் திரட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
இது ஏதோ இஸ்லாமியர்களுக்கு மட்டும் முஸ்லிம்களுக்கு மட்டுமான பிரச்சனை என்று இந்த அரசாங்கம் காமிக்க விரும்புகின்றது. இன்னைக்கு ரஜினிகாந்த் பிரச்சினையை பெருசாக்குறது. ஒரு முட்டாள் பற்றி பேச நேரமில்லை. எங்களுக்கு நேரம் கிடையாது. நாங்கள் அறிவார்ந்த சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றோம். ஒரு நடிகரை வைத்து டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறான். இதற்கெல்லாம் நாம் திசை திருப்பிவிட முடியாது என்று திருமுருகன் காந்தி தெரிவித்தார்.