Categories
மாநில செய்திகள்

“அவர் ஒரு விவரம் தெரியாத மந்திரி” நாங்க அதுக்கு மட்டும் துணை போகவே மாட்டோம்…. திமுக அமைச்சர் அதிரடி….!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே பொன்னை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் குமார வேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு வள்ளிமயில் பகுதியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவிலும் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.

இந்நிலையில் சென்னையில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர் கூறியதாவது, ஓபிஎஸ் என்னை இரட்டை வேடம் போடுகிறார் என்று கூறி ஏதோ பெனாத்துகிறார். நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர மாநில அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளோம். ஒருவேளை ஆந்திர மாநில அரசு பாலம் கட்டும் பணிகளை தீவிர படுத்தினால் நாங்களும் வழக்கை விரைவுப்படுத்துவோம். கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சிக்காலத்தின் போது எந்த ஒரு அணைகளும், மதகுகளும் பராமரிக்கப்படவில்லை. இதனால் தான் கிருஷ்ணகிரியில் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறியதுடன், பரம்பிக் குளத்திலும் மதகுகளின் கதவுகள் உடைந்து தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

அதை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். ஆனால் அதிமுக ஆட்சியில் அதை திரும்பி கூட பார்க்கவில்லை. என்ஐஏ அமைப்பு சோதனை நடத்திய போது மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஏதோ நாங்கள் தீவிரவாதத்திற்கு துணை போவது மாதிரி பேசினார். அவர் ஒரு விவரம் தெரியாத மந்திரி. நாங்கள் எந்த காலத்திலும் தீவிரவாதத்திற்கு துணை போக மாட்டோம் என்று கூறினார். அதன்பின் செய்தியாளர் ஒருவர் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்து கேட்டார்‌. அதற்கு அமைச்சர் தடை வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

Categories

Tech |