ஐரோப்பிய யாத்திரையில் ஈடுபட்டுள்ளார் நடிகர் பிரணவ் மோகன்லால்.
மலையாள சினிமாவில் பிரபல நடிகரான மோகன்லாலின் மகன் பிரணவ். இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக திரைப்படத்தில் அறிமுகமாகி நடித்து வருகின்றார். இவர் இதுவரை மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார்.
இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஹிருதயம் திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தார். இளம் நடிகர்கள் வருடத்திற்கு 5 படங்களில் நடித்த தங்களை பிஸியாக வைத்துக் கொள்ளும் நிலையில் இவர் வெற்றி படங்களை கொடுத்தாலும் அடுத்த படத்தில் நடிப்பது குறித்து எந்த யோசனையும் இல்லாமல் ஜாலியாக யாத்திரை என கிளம்பி விடுகின்றார்.
இந்த நிலையில் தற்போது இவர் ஐரோப்பிய நாடுகளில் யாத்திரை மேற்கொண்டு இருப்பதாக அண்மையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் வினீத் சீனிவாசன் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் ஐரோப்பாவில் இருக்கும் 2 நாடுகளுக்கு இடையே உள்ள 800 கிலோமீட்டர் தூரத்தை இவர் நடந்தே பயணித்து சென்றதாகவும் கூறியிருக்கின்றார். நடிகர் பிரணவ் மற்ற இளம் ஹீரோக்களை விட சற்று வித்தியாசமானவராக இருக்கின்றார்.