ஏர் இந்தியா நிறுவனம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உள்ளூர் விமான கட்டணத்தில் 50% சலுகை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் விமான கட்டணத்தில் Base Fare எனப்படும் அடிப்படை கட்டணத்தில் 50% சலுகையைப் பெறலாம். மூத்த பயணிகள் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும்போது பிறந்த ஆண்டுடன் கூடிய வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஏர் இந்தியா வழங்கிய மூத்த குடிமக்கள் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
பயணத்தின்போது அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் இல்லையெனில் டிக்கெட் முழு கட்டணம் வசூலிக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை ரத்து செய்தால் கட்டணம் திருப்பி வழங்கப்படாது. வரி மற்றும் இதர கட்டணங்கள் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்படும்.