Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு சாதாரண ஆளு அல்ல..! தமிழகத்துக்காக உழைச்சு இருக்காரு… கேப்டன் வீட்டுக்கு ஓடிய வைகோ மகன்..!!

செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 70 வது பிறந்தநாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் வைகோ பற்றிய ஆவணப்படம் வெளியாக இருக்கின்றது. அது தொடர்பான அழைப்பிதழை தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், அண்ணியார், சகோதரர் சுதீஷ் ஆகியோர்களிடம் கொடுத்தோம், மிகவும் மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டு,

ஆவணப்பட வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்து  தெரிவித்தார்கள். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நல்ல மனிதர். அவர் பூரண குணமடைந்து மீண்டும் எழுச்சியுடன் தமிழ்நாடு அரசியலில் அவர் வளம் வர வேண்டும் என்ற வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொண்டேன்.

தலைவர் வைகோவின் உடைய 56 ஆண்டுகால பொது வாழ்க்கையின் சாதனைகள், தியாகங்கள் உள்ளடக்கிய ஆவணப்படம். கிட்டத்தட்ட 75 நிமிடங்கள் ஆவணப்படம் இருக்கும். முதலமைச்சர் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு தந்தைக்கு ஒரு மகன் செய்ய வேண்டியது, 56 வருடம் இந்த தமிழ்நாட்டுக்காக அவர் உழைத்திருக்கிறார்.

இந்த ஆவணப்படத்தை  பொறுத்தவரைக்கும் ஒரு இயக்கத்தையோ, ஒரு நபரையோ யாரையும் நாங்கள் தாக்கி பேசவில்லை. அவருடைய சாதனைகள், அவருடைய தியாகங்கள் நிறைய விஷயங்கள், எங்க இயக்க தோழர்களுக்கே தெரியவில்லை. அதுபோன்ற அவர் அரும்பாடுபட்ட சில நிகழ்வுகள் அது உள்ளடக்கியதுதான் இந்த ஆவணப்படம் என தெரிவித்தார்.

Categories

Tech |