தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை விரைவாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் ஒரு சில கட்சியில் கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பாஜக முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் டெல்லியில் முதல்முறையாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி புகழ்பெற்றவர் ஆவார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் பாஜக முதல்வர் வேட்பாளராக அவர் இருப்பார் என்று அம்மாநிலத்தின் பாஜக தலைவர் கே. சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே தனக்கு முதல்வராக வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.