சுந்தர்.சி ‘அரண்மனை 3’ படத்தை பார்த்தவர் ஒரு நபர் தான் என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”அரண்மனை 3”. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வெளியிடுகிறார். இதனிடையே, இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதில் பலரும் கலந்து கொண்டு பேசினர். இந்த விழாவில் சுந்தர் சி பேசும்போது, அனைவரும் இந்த படத்தை எளிதாக எடுத்து விட்டீர்கள் என்று கூறினார்கள். ஆனால், இந்த படம் எடுப்பது மிகவும் கடினம். ஏனென்றால், இந்த மாதிரியான படங்களை மக்கள் விருப்பத்திற்கேற்ப எடுப்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். ஏற்கனவே, படத்தில் இருக்கும் விஷயங்களை விட கொஞ்சம் வித்தியாசமாகவும் வேறுபட்டதாகும் இருக்கவேண்டும் என்று கூறினார்.
மேலும், அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது எனவும் கூறினார். அதனால் உடனே அடுத்த படத்தை எடுத்துவிட முடியாது எனவும், அந்த படத்திற்கான கதை மற்றும் நடிகர்கள் ஆகியோரும் சரிவர அமைந்தால் தான் சாத்தியம் எனவும் கூறினார். அரண்மனை படம் என்றாலே நடிகைகளுக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்கும். அந்த வகையில், இந்த படத்திலும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம்தான்.
இந்நிலையில், அரண்மனை படத்தின் முதல் பாகத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். தற்பொழுது அரண்மனை மூன்றாம் பாகத்தையும் பிரம்மாண்டமான முறையில் வெளியிட இருக்கிறார். இந்த படத்தை பார்த்த ஒரே நபர் உதயநிதி மட்டும்தான். அரண்மனை முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு கண்டிப்பாக இந்த படம் வெற்றிபெறும் என கூறிய அவர்தான் தற்பொழுது இந்த படத்தையும் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார் என சுந்தர். சி தெரிவித்தார்.