Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்ன உடனே OK சொல்லிட்டாரு… இறுதி வரை வைகோவுடன் இருப்பேன் –  CM ஸ்டாலினின் நெகிழ வைத்த பேச்சு

மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பயணம் குறித்த ஆவணப்படம் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திருச்சியில் நடைபெற்ற மதிமுக சார்ந்த  ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு  என்னை அழைத்து இருந்தார். நான் போயிருந்தேன், அந்த நிகழ்ச்சியில் நான் பேசும் போது சொன்னேன்,  சமீபத்தில் அண்ணன் வைகோ அவர்கள் கலைஞர்கள் அவர்களை சந்தித்து, தலைவர் கையை பிடித்து கொண்டு   ” “அண்ணே கவலைப்படாதீங்க..

உங்களுக்கு எப்படி நான்  பக்க பலமாக பல ஆண்டுகளாக இருந்தேனோ”  அதேபோல் தம்பி ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என கூறினார். அதைத்தான்  திருச்சியில்பேசும் போது  சொன்னேன்… “அண்ணே  நீங்க எப்படி துணையிருப்பேன் சொன்னீங்களோ அதுபோல் நான் உங்களுக்கு துணை இருப்பேன் என்று சொன்னேன்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என்று விரும்பினாரோ இல்லையோ  எனக்கு தெரியாது, ஆனால் கூட்டணி அமைத்த நேரத்தில் இடங்கள் எல்லாம் ஒதுக்கீடு செய்த நேரத்தில் நான் அவரிடம் உரிமையாக சொன்னேன்.  அண்ணா உங்கள் உடல்நிலை ரொம்ப முக்கியம். எனக்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கு முக்கியம் அது மட்டுமல்ல, நீங்க ஒரு இடத்தில போய் நின்னு அந்த இடத்தில் வேட்பாளராக நின்று விட்டால் தமிழ்நாடு முழுவதும் நீங்கள்  சுற்றுப்பயணம் செய்ய முடியாது.

அதனால் மாநிலங்கவையில் உங்கள் குரல்  தொடர்ந்து ஒலிக்கவேண்டும். தேர்தல் முடிவு  எப்படி வருதோ ? இல்லையா நமக்கு தெரியாது. ஆனால் மாநிலங்கவை  உறுப்பினர் முடிவு என்பது உறுதியான முடிவு. வெற்றி பெறுகிறோமா, இல்லையோ நீங்கள் மாநிலங்களவை  உறுப்பினராக போகப் போகிறீர்கள்..

அதனால் நிச்சயமாக உறுதியாக எனது கருத்தை தயவு செய்து ஏற்றுக் கொண்டு எப்படி கலைஞர் அவர்கள் உங்களுக்கு மூன்று முறை ராஜ்யசபாவில் இடம் கொடுத்து உங்கள் குரலை  ஒலிக்க செய்தாரோ, அதுபோல் நானும் ஆசை படுகிறேன் என நான் அவரிடம் கேட்டேன். எனது ஆசையை… ஏற்று கொண்ட அவருக்கு  அப்போது நன்றி சொன்னேனோ இல்லையோ இப்பொது உங்கள்  அனைவரின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பேசினார்.

Categories

Tech |