தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திருமதி சசிகலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் அதனால் அவர்கள் மீதெல்லாம் குற்றம் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் இது அரசியல் காரணத்திற்காக அமைக்கப்பட்ட ஆணையம்.
ஐஏஎஸ் அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் ரொம்ப புகழ் பெற்ற ஆபிசர், எல்லாருக்கும் தெரியும். எல்லா அரசாங்கத்திலும் அவர் முக்கியமான துறையில் பொறுப்பில் வைப்பார்கள். ஏனென்றால் அவர் சிறப்பாக செயல்படக்கூடியவர், சுனாமி காலத்தில் அவர் கலெக்டராக இருந்து, எங்களுடன் சேர்ந்து அங்கு இறந்து கிடந்த பிணங்களை எல்லாம் வெட்டியான் போல அள்ளும் போது அவரும் எங்களுடன் இருந்து செய்தவர், அப்பேற்பட்ட ஒரு புகழ் பெற்ற…
எல்லாராலும் மதிக்கக்கூடிய அதிகாரி மேலே குற்றச்சாட்டுகளை ஆணையம் சொல்லும் போது, தமிழ்நாடு அரசாங்கம் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் ? எதுவாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் எதிர்கொள்வது தானே எல்லாருடைய இயல்பும், இதையும் எதிர்கொள்வோம்.
அம்மாவின் மரணத்திற்கு பிறகு இந்த மாதிரி பிரச்சாரங்களை கிளப்பியது திமுக தான். அதை திரு.பன்னீர் செல்வம் அன்றைக்கு பதவியைவிட்டு போனதால் அதை அவர் கையில் எடுத்தார், திரும்பவும்.. திரு. பழனிச்சாமியும் அவரும் ஒன்று சேர்ந்த போது, மிகப் பெரிய சந்தேகம் இருக்கிறது. அதற்காக ஆணையம் அமைக்க வேண்டும் என்றார்கள்.ஆணையம் அமைப்பதற்கு குற்றச்சாட்டுக்கு காரணமாக திமுக பரப்பினதால், பன்னீர்செல்வமும் காரணமாகிவிட்டார் என தெரிவித்தார்.