பிரபலமான பாலிவுட் இயக்குனர் சஜித் கான். இவர் தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இயக்குனர் சஜித் கான் மீது பல நடிகைகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அதோடு சஜித் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஷெர்லின் சோப்ரா சஜித் கான் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சஜித் கானின் வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை ஷெர்லின் சோப்ரா அழுது கொண்டே பேசிய ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதாவது செர்லின் சோப்ரா வாய்ப்பு கேட்டு போகும் போது சஜித் கான் அவரின் ஆணுறுப்பை காட்டியதோடு அதை தொட சொல்லி வற்புறுத்தியதாகவும், தன்னுடைய ஆடைகளை கழட்டி காண்பிக்கும் படியும் சொன்னதாக கூறியுள்ளார். அதோடு சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் பாதுகாப்பில் சஜித் கான் இருக்கும் வரை அவரை யாராலும் தொட முடியாது எனவும் அழுதபடியே கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் கூட உதவி செய்ய மறுப்பு தெரிவிக்கிறார்கள். சல்மான் கான் எல்லோரும் பாய் ஜான் என்று அழைக்கிறார்கள். எனவே சஜித் கான் விவகாரத்தில் சல்மான் கான் உதவ வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சல்மான் கான் ஒரு அண்ணனாக இருந்து உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.