ஊ சொல்றியா பாடல் குறித்து நடிகை ஆண்ட்ரியா பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் முன்னணி நடிகர்களின் படங்களிலும், பிரபல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்கள் பாடி வருகிறார். மேலும், வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இவர் ‘பிசாசு 2’ படத்தில் நடித்துள்ளார்.
இதனையடுத்து அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் ‘ஊ சொல்றியா’ பாடலை ஆண்ட்ரியா பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்த பாடல் குறித்து நடிகை ஆண்ட்ரியா பேசியுள்ளார்.
அதில் இந்த பாடலை தேவிஸ்ரீ பிரசாத் தன்னைப் பாடுமாறு கூறினார். ஆனால் எனக்கு திருப்தியாக இல்லை. ஆகையால் பாட முடியாது என கூறி சென்றுவிட்டேன். ஆனால் டிஎஸ்பி என்னை கட்டாயப்படுத்தி உன்னால் பாட முடியும் என ஊக்கப்படுத்தினார். அதன் பிறகுதான் இந்த பாடலை பாடியதாகவும், இந்த பாடல் ஹிட்டானதற்கு டிஎஸ்பி தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.