பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரசவ வலியால் துடித்த தனத்திற்கு கண்ணன் தான் உதவினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்றாகும். இந்த சீரியலில் தற்போது நடந்துகொண்டிருக்கும் கதைக்களம் என்னவென்றால், மூர்த்தியின் கடைசி தம்பியான கண்ணன், ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால், கண்ணன் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்.
இப்போது, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா தற்போது மூர்த்தியின் எதிர் வீட்டிற்கு குடி வந்துள்ளார்கள். இந்நிலையில், வரவிருக்கும் எபிசோடில் தனத்திற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அந்த நேரத்தில் வீட்டில் மீனா, முல்லை யாரும் இல்லை. தனத்தின் அம்மா மட்டும் இருக்கிறார். அவர் வெளியில் வந்து கூச்சலிடும் போது கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டுக்குள் வந்து பார்க்கிறார்கள். நான் ஆட்டோ அழைத்து வருகிறேன் என்று கூறிவிட்டு கண்ணன் செல்கிறார். பிறகு வீட்டிலிருந்து தனத்தை தூக்கிக் கொண்டு செல்கிறார். அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.