Categories
அரசியல் மாநில செய்திகள்

”அ” ”ஆ”-க்கு வித்தியாசம் தெரியாதவன் வாரிசு; இன்பநிதி அடுத்த முதல்வர்: சீறிய துரைமுருகன்

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன்,  நாங்கள் யாருடைய வாரிசுகள் ? இந்த மண்ணிலே வெள்ளையன் வந்தபொழுது…  வெள்ளையனை 13 முறை ஓடவிட்டு புலித்தேவனின் வாரிசுகள் நாங்கள். வெள்ளையனுக்கு வரி கொடுக்க மறுத்த  எங்கள் பாட்டன் மருதுபாண்டியணின் வாரிசுகள் நாங்கள்.

இந்திய நிலப்பரப்பில் வெள்ளையனிடத்தில் இழந்த நிலத்தை மீட்டெடுத்த பெருமைக்குரிய சொந்தக்காரி எங்கள் அப்பத்தா வேலுநாச்சியாரின் வாரிசுகள் நாங்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தற்கொலைப் படை போராளியாக மாறி, இந்த நிலத்திலேயே வீரம் என்றால் என்னவென்று ? எங்களுக்கு காட்டிய எங்கள் பாட்டன் சுந்தரலிங்கத்தின் உடைய வாரிசுகள் நாங்கள்.

வெள்ளையனை  அடிக்க வேண்டும் என்றால்,  அவனுடைய வணிகத்தின் மீது கை வைக்க வேண்டும்.  பொருளாதாரத்தின் மீது கை வைக்க வேண்டும் என்று கப்பலை  நிறுவி வெள்ளையனுக்கு வணிக கப்பலை காட்டிய எங்கள் பாட்டன் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனார் வாரிசுகள் நாங்கள்.

நீ வாய்பூட்டு சட்டம் போட்டு,   கை ரேகை சட்டம் போடு, கை விரலை வெட்டி வீசுவோம்  என்று முழங்கி ஒன்பது ஆண்டுகள் இந்தியாவில் சிறையில் இருந்த எங்கள் பாட்டன், எங்கள் தாத்தா முத்துராமலிங்க தேவரின் வாரிசுகள் நாங்கள். அந்த வாரிசுகளுக்கு மட்டும்தான் வாரிசு என்று சொல்வதற்கு தகுதி இருக்கு.

அந்த வாரிசிலே  உலகத்தில் 24 நாடுகளை எதிர்த்து சண்டையிட்ட, பிரபாகரன் உடைய அரசியல் வாரிசு தான் அண்ணன் சீமான். அவன் வாரிசு.. ஆ… ஆவண்ண்ணா… அக்கண்ணாவுக்கும் வித்தியாசம் தெரியாதவன்,   நாட்டிலே வாரிசு. உதயநிதி வாழ்க என மட்டுமல்ல,  இன்பநிதி வாழ்க என்றும் நாங்கள் கோஷம் போடுவோம்.

Categories

Tech |