Categories
அரசியல் மாநில செய்திகள்

NO 1ஆக ”உதயநிதி” கொண்டு வருவார்; ஓஹோ….. ஆஹா சொல்வோம்; அண்ணாமலை கருத்து!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான துறை என்ன இருக்கிறது என்றால் ? Information and Broadcasting ministry தான் சிறப்பாக இருக்கும். இளைஞர் மேம்பாடு விளையாட்டு துறையை விட, Information and Broadcasting எடுத்துக்கொண்டு, சினிமா எப்படி எடுக்கிறார்கள் ?  ஷூட்டிங் எல்லாம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது ?

எவ்வளவு படத்தை வெளியிடலாம் ? என்று செய்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டை உதயநிதி அவர்கள் திரைத்துறையில் நம்பர் ஒன்றாக கொண்டு வந்து விடுவார். நம்பர் ஒன்னாக அவர் இருப்பார். இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால்….  நிறைய ப்ரொடியூஷர்கள் வீட்டிற்கு முன்னால் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்…  எங்களுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்று…  நம்முடைய கெட்ட காலம் இதெல்லாம் பார்க்கணும்,  கேட்க வேண்டும் என்று இருக்கிறது….

பத்திரிக்கை நண்பர்கள் இதெல்லாம் எழுதணும் என்று இருக்கு… அமைச்சர் அவர்கள் சொல்லும்போது இதை எழுதித்தானே ஆகவேண்டும். அமைச்சர் கருத்து சொன்னால் நீங்கள் எழுத வேண்டும், மிகுந்த துரதிஷ்டவசம். இதை போல் துரதிஷ்டவசமான அரசியலை தமிழ்நாட்டு பார்த்ததே கிடையாது.ஒரு தனி மனிதனுக்காக ஜால்ரா அடிப்பதற்காக காலையிலிருந்து இரவு வரை அமைச்சர்களுக்கு ஒரே வேலை. இவரை புகழ்வது, இந்த மாதிரி வார்த்தை எல்லாம் சொல்வது. இன்பநதிக்கும் ஓஹோ சொல்வோம்… ஆஹா சொல்வோம் என்று கே.என் நேரு அவர்கள் சொல்கிறார் என தெரிவித்தார்.

Categories

Tech |