Categories
அரசியல் மாநில செய்திகள்

கடுமையா உழைக்கிறாரு.. ஆற்றலோட செயல்படுறாரு… பாராட்டு மழை பொழிந்த OPS ..!!

பிரதமர் மோடி கடுமையாக உழைக்கின்றார், ஆற்றலோடு செயற்படுகின்றார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.

கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மாண்புமிகு அம்மா அவர்களது அரசு அனைத்து துறைகளிலும் ஏராளமான சரித்திர சாதனைகளை படைத்து, தமிழக மக்களுடைய பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. அம்மாவின் அரசு கோடிக்கணக்கான தமிழக மக்களை நம்பி கழகத் தொண்டர்களின் மீது நம்பிக்கை வைத்து, மக்களுடன் பயணித்து, மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவதில் இந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளது என்பதை நாம் நன்றாகவே அறிவோம்.

அதனால்தான் தமிழக மக்கள் இன்றும் எங்கள் பக்கம், நாங்கள் என்றும் மக்கள் பக்கம் என்பதனை இன்று நான் சுட்டிக்காட்ட கடமை பட்டு இருக்கின்றேன். இந்த சாதனைகளையெல்லாம் தமிழக மக்கள் பார்க்கிறார்கள், பாராட்டுகிறார்கள், மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியினரும் இதைப் பார்க்கிறார்கள். ஆனால் பரிதவிக்கிறார்கள்.

மாண்புமிகு அம்மாவின் அரசுக்கு தினந்தோறும் மக்கள் செல்வாக்கு கூடுகிறது என்று மனம் பதைபதைக்கிறார்கள். அதனால் மனம் பொறுக்க முடியாமல் குமுறுகிறார்கள், குறை சொல்கிறார்கள், குற்றம் சொல்கிறார்கள் என குற்றம் சாட்டினார். இந்தியாவை இன்றைக்கு வல்லரசு நாடாக உருவாக்கி காட்டுகின்ற மகிழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கின்ற நம்முடைய பாரத பிரதமர் மோடி ஜீ அவர்கள் இன்றைக்கு மிகவும் கடினமாக… இந்திய திருநாட்டை நல்வழிப்படுத்தி வருவதற்கு ஆற்றலுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றார் என பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டினார்.

 

Categories

Tech |