வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் பும்ராவைப் பாராட்டி புகழ்ந்துள்ளார் .
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டானது ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பும்ராஒரு விக்கெட்டையும் , 2-வது இன்னிங்சில் 8 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இந்நிலையில் , அவரது பந்து வீச்சை கண்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் அசந்து போனார்கள் .
இதில் , வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆன்டி ராபர்ட்ஸ், பும்ரா சிறந்த பந்து வீச்சாளர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் , ‘‘நான் கிரிக்கெட் போட்டியில் பார்த்ததில் பும்ராவின் ஆக்சன் மிகவும் அற்புதமானது , அவரின் பந்து வீச்சை புரிந்துகொள்ள ஆராய வேண்டியுள்ளது. ஆனால், அவர் எங்களது காலக்கட்டத்தில் இருந்திருந்தால், அவரைப் போன்ற ஒருவரை நாங்கள் உருவாக்கியிருப்போம் என்றும் ,
எங்களது காலக்கட்டத்தில் இத்தகைய பந்து வீச்சு ஆக்சன் முறை மட்டும் இல்லாமல் போய்விட்டது என்றும் கூறினார் . இதைத்தொடர்ந்து , உண்மையிலேயே பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளரை எங்களால் உருவாக்க முடியாமல் போய்விட்டது . மேலும் , என்னுடைய காலக்கட்டத்தில் இந்தியாவில் ஏராளமான ஸ்பின்னர்கள் இருந்தார்கள்.
ஆனால் , வெளிநாட்டு மண்ணில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்றார் . அதில் குறிப்பாக இந்தியாவில் கபில்தேவ் மற்றும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். மேலும் , பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளரை உருவாக்குவார்கள் என்று நாங்கள் நினைக்கவே இல்லை என்றும் நான் பார்த்த வகையில் சிறந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான் என்றும் புகழாரம் சூட்டினார் .