மனித தலையை வெட்டி குப்பைத் தொட்டியில் வீசி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஸ்பெயினில் உள்ள Huelva நகரில் மனித தலையை வெட்டி குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ள சம்பவத்தை பார்த்த சிலர் அந்த அதிர்ச்சியை பெரிதாக எண்ணவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் சந்தேகத்தின் காரணமாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வெட்டப்பட்ட தலையை கைப்பற்றினர். மேலும் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இக்கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் அப்பகுதியில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க நபரின் தலையில்லாத உடலை கண்டுபிடித்து மீட்டுள்ளனர். இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் கொலை செய்த நபரை கைது செய்துள்ளனர். இருப்பினும் இந்த வழக்கில் காவல்துறையினர் கொலையாளியின் பெயர் உள்ளிட்ட எந்தவொரு தகவலையும் தெரிவிக்க மறுத்துள்ளனர்.