தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க, சமுத்திரகனி, மகாநதி சங்கர், ஜான் கொக்கன், ஜி.எம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் துணிவு படத்தில் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் துணிவு பொங்கல் 2023 என்ற ஹேஸ்டைக்கை தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர். மேலும் இந்த ஹேஷ்டேக்கால் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் பொங்கலன்று ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.