Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய போதை… தாயென்றும் பாராமல் மகன் செய்த அட்டூழியம்… பின்னர் நடந்த கொடூர சம்பவம்..!!

பெற்ற மகனே தாயை கற்பழிக்க முயன்ற சம்பவத்தால் தாய் மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 45 வயதான விதவைப் பெண் ஒருவர் 25 வயது மகன் மற்றும் 65 வயது தாயுடன் வசித்து வருகிறார் அவரது மகன் தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார். சமீபகாலமாக அவரது மகன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த வாரம் அவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து தாயிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த தாயும், அவரது அம்மாவும் சேர்ந்து அந்த வாலிபரின் கழுதை கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு, பின்னர் யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு பின்புறம் உள்ள இடத்தில் அவரை புதைத்து வைத்துள்ளன. கடந்த சில நாட்களாக அந்த இளைஞனை காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு காவல்துறையில் தகவல் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் தாயையும், அவரது வயதான அம்மாவையும் விசாரணை செய்த போது உண்மையை ஒப்புக் கொண்டனர். பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |