குடிகார தந்தை ஒருவர் குடித்துவிட்டு வந்து தனது ஒன்றரை வயது மகளை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வருபவர் 40 வயதான கௌதம். இவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அதிலிருந்து விடுபட வைத்தியங்களும் எடுத்தும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை. சம்பவ தினத்தன்று ஒன்றரை வயது மகள் அழுது கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அவர் குழந்தையை தூக்கி சுவற்றில் எறிந்துள்ளார். இதில் மீண்டும் குழந்தை அழுததால் சத்தம் கேட்டு தாய் வருவதற்குள் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் கௌதமை கைது செய்தனர். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தாயிடம் விசாரணை நடத்தியபோது: “இரண்டு குழந்தைகள் மீதும் பிரியமாக இருப்பார். அவர் ஏன் இப்படி செய்தார் என எனக்குப் புரியவில்லை என தெரிவித்தார். மேலும் அவர் அவர் குடித்திருந்ததால் இப்படி செய்தார்” என தெரிவித்துள்ளார்.