செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பு ஒரு நன்மையை பயக்கும் என்று எண்ணி அந்த தீர்ப்பை வரவேற்றோம். அப்படித்தான் இந்த தீர்ப்பு அமைந்திருந்தது. தீர்ப்பை வெற்றிகரமாக பெற்ற கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள், தன் பக்கம் தீர்ப்பு வந்துவிட்டது என்கின்ற ஒரு பெரிய ஆரவாரமும், தலைகனமும் இல்லாமல், எங்கே போனாலும் சரி…
எங்களது ஓபிஎஸ் அவர்களுக்கு, ஒருங்கிணைப்பாளருக்கு வேண்டுகோளாக மக்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அவர்கள், ஜே சி டி பிரபாகரன், துணை ஒருங்கிணைப்பாளர் திரு. மனோஜ் பாண்டியன் அனைத்து நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர் இப்படி பல இடங்களில் மக்கள் சொல்வதெல்லாம்…
எனக்கும் சேர்த்து, என்னை பார்க்கின்றவர்கள் எல்லாம், கட்சியில் அடித்துக் கொள்ளாதீர்கள் வேண்டாம், அதை விட்டுவிட்டு தயவு செய்து எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள். அப்போதுதான் நீங்கள் திமுகவை எதிர்கொள்ள முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தை பிரிந்திருந்து எப்படி எதிர்கொள்ள முடியும்? இது தலைவரும், அம்மாவும் வளர்த்த இயக்கம். இந்த தகராறு இப்படியே சென்றால் எப்பொழுது முடியும், என்பது தான் மக்களுடைய பொதுவான கேள்வியாக இருக்கின்றது.
தொண்டர்கள் மனதிலும் இப்படியே நாம் அடித்து கொண்டே போனால், இது சிதைந்து ஒன்றும் இல்லாமல் போய்விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் வழக்கிலே வெற்றி பெற்ற நிலையில் ஒருங்கிணைப்பாளர்,என்ற பதவியை 5 வருட காலம் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்பதை எல்லாம் நீதிமன்றம் கருத்திலே கொண்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில்…இதிலே வெற்றி பெற்ற ஓபிஎஸ் அவர்கள் எப்போதும் போல மிக பெரிய மனதுடன், அனைவரும் ஒன்றிணை வேண்டும். மீண்டும் கழகம் காப்பாற்றப்பட வேண்டும், ஆகவே அனைவரும் ஒருங்கிணைந்து சென்றால், இந்த கழகம் காப்பாற்றப்படும். நடந்ததை மறப்போம், நடந்தவைகளை விட்டுவிடுவோம் என்று சொன்னார் என தெரிவித்தார்.