Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

49,50,000 ரூபாய் கடன்…. மோசடி செய்த பள்ளி தலைமை ஆசிரியை…. கைது செய்த போலீஸ்….!!

49,50,000 ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த பள்ளித் தலைமை ஆசிரியை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொங்கேகவுண்டன்புதூர் பகுதியில் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியைராக மாலதி பணிபுரிந்து வருகின்றார். இவர் கார்த்திக் குமார் என்பவரிடம் மகளின் திருமணத்திற்காகவும், மகனின் உயர் கல்வி செலவிற்காகவும் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இதேபோல் தலைமையாசிரியை மேலும் 6 நபரிடம் கடன் வாங்கி மொத்தம் 49½ லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இதனை அடுத்து கார்த்திக் குமார் தலைமை ஆசிரியை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமையாசிரியை வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள காரை பறிமுதல் செய்ததோடு, மாலதியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |