கோவை அருகே 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக தலைமை ஆசிரியர் 3 ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் மேகநாதன் ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி அருணா மீது வழக்குப்பதிவு போக்ஸோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.