Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதற்கு மாத்திரை, மருந்தா…? இதை செய்தால் போதும்….. நிமிஷத்தில் குணமாகும்….!!

காலை தலைவலியை நீக்குவதற்கான வழிமுறைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

காலையில் எழுந்தவுடன் இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோர் சந்திக்கக்கூடிய பிரச்சனையாக தலைவலி இருந்து வருகிறது. இந்த தலைவலியை எதிர்கொள்ள பலர் மாத்திரை, மருந்துகளை நாள்தோறும் எடுத்து வருகின்றனர். சிலருக்கு சாதாரண இஞ்சி  டீ உள்ளிட்டவற்றை குடித்தால் தலைவலி சரியாகும். மாத்திரை, மருந்துகளை காலையில் வரும் தலைவலிக்காக நாள்தோறும் எடுத்துக் கொண்டிருந்தால்,

அது எதிர்காலத்தில் உடலில் மேலும் சில பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். காலையில் எழுந்தவுடன் ஏற்படும் தலைவலியை தீர்க்க 8 மணி நேரம் தூக்கம் கட்டாயம். மேலும் இரவு ஒன்பது மணிக்கு மேல் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் 3 முதல் 5 நிமிடங்கள் தியானம் செய்யலாம்.

நொச்சி இலையை வெந்நீரில் ஆவி பிடிக்கலாம். கொம்பு மஞ்சளை சுட்டு அதில், வரும் புகையை முகரலாம். இது போன்ற இயற்கையான முறைகளை கடைபிடித்தாலே, தானாகவே தலைவலி சரியாகும். இதற்காக மாத்திரை மருந்துகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது ஆக இருக்காது. 

Categories

Tech |