அமெரிக்காவில் ஒரு பெண், மாத்திரைக்கு பதிலாக ஹெட்போனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த Carly என்ற பெண்ணிற்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதற்கு மாத்திரை போட நினைத்தவர், கவனக்குறைவாக ஹெட்போனை விழுங்கி விட்டார். இது தொடர்பில் அந்த பெண் அழுதுகொண்டே இணையதளத்தில் வீடியோ பதிவிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால், ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஹெட்போனை ஒரு கையிலும், மாத்திரையை ஒரு கையிலும் வைத்திருந்தேன். எனவே, மாத்திரைக்கு பதிலாக ஹெட்போனை விழுங்கி விட்டேன். அதன்பின், என் ஹெட்போனை தேடிப்பார்த்தேன், எங்கு தேடியும் கிடைக்காததால், லொகேஷனை பார்த்த போது அது நான் அமர்ந்துள்ள இடத்தை காட்டியது.
மேலும், என் போனில் இசையை ஓடவிட்டபோது, என் வயிற்றிலிருந்து சத்தம் கேட்டதால், பயந்துவிட்டேன். அதன்பின்பு மருத்துவமனைக்குச் சென்று, எக்ஸ்ரே எடுத்துப்பார்த்த போது, என் வயிற்றில் ஹெட்போன் இருந்தது உறுதி செய்யப்பட்டது. எனினும், எந்த உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று மருத்துவர் கூறியிருக்கிறார். ஆனால், நல்ல வேளையாக, எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாமல், இயற்கையாக வயிற்றிலிருந்த, ஹெட் போன் வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.