சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.
தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிக்கையாளர் அறை மூடப்பட்டுள்ளது. கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 15 நாட்களுக்கு மேலாக தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களாக இருக்கும் பலருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் மட்டும் சுமார் 150-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை தலைமைச் செயலகம் ஒருநாள் முழுவதுமாக மூடப்பட்டு, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணியினை சென்னை மாநகராட்சி மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய பத்திரிக்கையாளர் அறை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டடு, சுத்தப்படுத்தும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.