கொத்தமல்லியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
உணவே மருந்து என நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் தற்போது மருந்தே உணவு என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. நம் குழந்தைகளுக்கு உணவை சமைக்க சொல்லி தரும் வேளையில் அதன் மகத்துவத்தையும் நாம் கண்டிப்பாக சொல்லி தர வேண்டும். பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது ஆபத்தை நோக்கி சென்று விடும். சிலர் உணவில் எந்த பொருட்களை சேர்கிறோம் என்று கூட தெரியாது.
அப்படி ஒன்று தான் கொத்தமல்லி. கொத்தமல்லி இலைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு உணவின் சுவையும் அதிகரிக்கும். இதில் சுவையை தவிர பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
கொத்தமல்லி இலையில் நல்ல அளவு விட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கொத்தமல்லி இலையை தொடர்ந்து உட்கொள்வது செரிமான சக்தியை அதிகரிக்கும்.
வயிறுப் பிரச்சினைகள், அஜீரணம், வயிற்று வலி, வாயு போன்றவற்றை நீக்குகின்றது.
கொத்தமல்லி இலைகளில் உள்ள கூறுகள் நம் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகின்றது. இதனால் உடல் எடை குறைகிறது.
இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் அன்றாட உணவில் இதனை சேர்த்து கொள்வது சிறந்தது.
சரும பிரச்சனையை சரிசெய்ய முகப் பொலிவை அதிகரிக்க கொத்தமல்லியை தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.