Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து குணமடைந்தார்… புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி..!!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் என் ஆர் காங்கிரஸ்  10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. இந்த  கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்தார்.  கடந்த 7ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து முதல்வராக பதவியேற்ற இரண்டு நாட்களில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையும் அவ்வப்போது அவரது உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தது. தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டதாகவும், நாளை புதுச்சேரி திரும்ப உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |