தேவையான பொருட்கள்:
கேழ்வரகு – 5 கப்
சர்க்கரை – தேவையான அளவு
ஏலக்காய் – தேவையான அளவு
கேசரி – பவுடர் தேவையான அளவு
குங்குமப்பூ – சிறிதளவு
செய்முறை:
முதல் நாள் இரவே கேழ்வரகை கல் இல்லாமல் அரித்து ஊற வைக்கவும். மறுநாள் காலையில் நீரை வடித்துவிட்டு கேழ்வரகை மட்டும் ஒரு சுத்தமான துணியில் கட்டி முடிந்து வைக்கவும். மூன்றாம் நாள் இது நன்கு முளைத்திருக்கும். முளைகட்டிய இந்த கேழ்வரகை துணியில் விரித்துவிட்டு உலர்த்தவும். நன்கு காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து வறுக்கவும் .
அதை மிக்சியில் கொடுத்து நன்கு நைஸாக அரைத்துக்கொள்ளவும். பிறகு மெல்லிய துணியில் போட்டு சலித்து கொள்ளவும் . சலித்த மாவுடன் பொடித்த ஏலம், கேசரி பவுடர்,அல்லது குங்குமப்பூ, பொடித்த சர்க்கரை, ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.
இதுதான் உடனடி கேழ்வரகு மால்ட் . சூடான பால் ஒரு கப் எடுத்து. அதில் இந்த கேழ்வரகு மால்ட் பவுடரை ஒரு தேக்கரண்டி கலந்து. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம் குளிர வைத்தும் குடிக்கலாம்.