Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு ”ஆரோக்கியமும் பலமும் அளிக்கும்” கம்பு வடை..!!

தேவையான பொருட்கள்:

கம்பு  –   கால் கப்

கடலைப்பருப்பு  –   கால் கப்

உளுத்தம்பருப்பு  –   கால் கப்

புழுங்கல் அரிசி  –   கால் கப்

பச்சை மிளகாய்  –  4

இஞ்சி  –   ஒரு துண்டு

கறிவேப்பிலை  –   சிறிதளவு

பொடியாக நறுக்கிய வெங்காயம்  –   அரை கப்

உப்பு  –   தேவையான அளவு

செய்முறை:

கம்பை நன்றாக களைந்து. அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும் .உளுந்து, கடலைப்பருபை ஒன்றாக ஊற வைக்கவும். அரிசியை கெட்டியாக அரைத்து. பச்சைமிளகாய் ,இஞ்சி, கருவேப்பிலை, உப்பு சேர்த்து  ஊறிய உளுந்து கடலைப்பருப்பை அதில் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் இதனுடன் வெங்காயம் சேர்த்து பிசைந்து சின்ன சின்ன வடைகளாக தட்டி  கடாயினள்  எண்ணெய் காய வைத்து பொரித்து எடுக்கவும். சூடான மற்றும் சுவையான கம்பு வடை தயார்

Categories

Tech |