தமிழகத்தில் இன்று 4,343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. தினமும் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் மாலை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..
அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 3,095 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 57% ஆக அதிகரித்துள்ளது என்றார்.. இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 52, 926 ல் இருந்து 56,021 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று 33,488 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கடந்த 24 மணி நேரத்தில் 4,343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானதாக தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,392 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இன்று ஒரே நாளில் கொரோனாவால் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,321 ஆக அதிகரித்துள்ளது..