Categories
தேசிய செய்திகள்

சுகாதாரத்துறை பணியாளர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – உள்துறை அமைச்சகம் கடிதம்!

சுகாதாரத் துறை பணியாளர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு மருத்துவர்களை தாக்கினால் 6-7 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்புப்பணியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதலை பொறுத்து கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார். மேலும் மருத்துவ பணியாளார்களை காக்க அவசர சட்டம் கொண்டு வரப்படும் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பின்னர் அவசர சட்டம் செயல்படுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளது குறிபிடத்தக்கது.

Categories

Tech |