Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி போட்டால்?… அடுத்த 10 வாரங்களில் இது நடப்பது உறுதி…. எச்சரிக்கை மக்களே!… சுகாதார அதிகாரிகள் ஷாக் நியூஸ்….!!!!

இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் பூஸ்டர் டோஸ் ( மூன்றாவது தவணை ) தடுப்பூசி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

உலகில் உள்ள பல்வேறு மருத்துவர்களும் தற்போது அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த மூன்றாவது தடுப்பூசி ( பூஸ்டர் டோஸ் ) கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒமிக்ரான் வைரஸ் அதிகம் தாக்குவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஏனென்றால் இதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 9.5 சதவீதம் பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த நிலையில் இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் பூஸ்டர் தடுப்பூசி ( மூன்றாவது தடுப்பூசி ) தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது மூன்றாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பத்து வாரங்களிலேயே ஒமிக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பூசி பாதுகாப்பு தன்மை கணிசமாக குறைவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைவாகவே உள்ளதாக UK Health Security Agency ( UKHSA ) ஆய்வில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் டெல்டா போன்ற வைரஸ்களை விட ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் வரும் காலங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒமிக்ரானுக்கு எதிரான தடுப்பூசி குறைவான பாதுகாப்பையே அளிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி முதல் இரண்டு தடுப்பூசிகளுடன் ஒப்பிடும் போது கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு தன்மையை அதிகளவில் வழங்குவதாக பகுப்பாய்வு காட்டுகிறது.

ஆனால் HSA மூன்றாவது டோஸ் ( பூஸ்டர் டோஸ் ) தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 10 வாரங்களுக்குப் பிறகு தடுப்பூசி பாதுகாப்பு தன்மை கொரோனா அறிகுறி நோயைத் தடுப்பதில் 15 முதல் 25 சதவீதம் குறைந்து விடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அதேபோல் உண்மை நிலவரம் என்னவென்றால் கடந்த 8 முதல் 10 வாரங்களுக்கு முன்பு மூன்றாவது டோஸ் ( பூஸ்டர் டோஸ் ) தடுப்பூசியை செலுத்தி கொண்ட மக்கள் சிலர் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்வதால் தங்களுடைய உயிர் பாதுகாக்கப்பட்டதாக மக்கள் கருதுகிறார்கள். ஆனால் தடுப்பூசி பாதுகாப்பு அடுத்த 10 வாரங்களில் குறையும் என்பதால் நோய் எதிர்ப்பு தன்மையும் மக்களிடம் இருக்காது என்று HSA நம்புகிறது. எனவே மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 10 வாரங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு தன்மை கணிசமாக குறைவது தெரிய வந்துள்ளதால் தடுப்பூசி போட்டு விட்டோம் என்ற எண்ணத்தில் அலட்சியமாக இருக்காமல் மிகவும் கவனமுடன் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது.

Categories

Tech |