சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 107 பேர் பாதிக்கபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகள் பலத்த பாதுகாப்புடன் உள்ளது. நாட்டிம் அனைத்து மாநில விமான நிலையங்களிலும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்டுகின்றனர்.
இந்த நிலையில் பஹ்ரைனிலிருந்து திருவனந்தபுரம் வந்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவருடன் விமானத்தில் பயணித்தவர்களில் 47 பேர் தமிழ்நாட்டினர். இதனால் அவர்களை கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி , அரசு மருத்துவமனை முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் வருவாய் மற்றும் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும், கேரளா வந்த விமானத்தில் பயணித்த தமிழர்களின் தகவல்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளன என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.