Categories
மாநில செய்திகள்

32 மாவட்டங்களில் குறைந்தது… ஆனால்… சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி..!!

32 மாவட்டங்களில் கொரோனா அளவு குறைவாக இருந்தாலும் மற்ற மாவட்டங்களில் அதிகமாக உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்..

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டது.. இதனால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.. இதனையடுத்து ஊரடங்கில் அடுத்தடுத்து சில தளர்வுகளை அரசு அறிவித்தது.. இந்த சூழலில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா 3உச்சம் தொட தொடங்கியுள்ளது.

இந்தநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர், 32 மாவட்டங்களில் கொரோனா அளவு குறைவாக இருந்தாலும் மற்ற மாவட்டங்களில் அதன் விகிதம் அதிகமாக உள்ளது.. மதம் சார்ந்த மற்றும் குடும்ப நிகழ்வுகளில் கூட்டம் அதிகம் கூடுவதால் கொரோனா வேகமாக பரவியது.. டெங்கு தடுப்பு பணிகளிலும் தீவிரமாக ஈடுபட மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்..

Categories

Tech |