Categories
தேசிய செய்திகள்

உடல்நலம் தேறிய அமித்ஷா… “விரைவில் டிஸ்சார்ஜ்”.. மருத்துவம் நிர்வாகம் அறிவிப்பு..!!

சென்ற 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமிர்ஷா உடல்நலம் தேறி இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் பாரபட்சம் பாராமல் அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது. இந்த வைரஸ் மக்களை மட்டும் குறி வைக்காமல் முன் களப்பணியாளர்கள், அரசியல்வாதிகள் போன்ற முக்கிய பதவி வகிக்கும் தலைவர்களையும் பாதித்து வருகிறது. ஆனால் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட தலைவர்கள் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும சிலர் பலியாகியுள்ளனர். அந்த வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அதன்பிறகு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மீண்டும் சென்ற 18ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் உள்ள அவர் உடல் நலம் தற்போது தேறி வருவதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் விரைவில் பணிக்கு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |