தேவையான பொருட்கள் :
பிரட் துண்டு – 2,
துருவிய பூசணிக்காய் – 1 கப்,
கெட்டித் தயிர் – 1/2 கப்,
பச்சைமிளகாய் – 4,
மயோனைஸ் – 1 கப்,
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் – தேவையான அளவு.
தக்காளி சாஸ் – 1 கப்.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து, பச்சைமிளகாய், பூசணிக்காய், உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும். வெந்ததும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து பின்பு ஆற வைக்கவும். ஆறிய பின் யோனைஸ் சேர்த்து நன்கு கலந்து பிரெட்டில் ஒருபுறம் தடவி, இன்னொரு பிரெட்டால் மூடி மேலே வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்யவும். பின்னர் தக்காளி சாஸுடன் பரிமாறவும்.